பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு
விழிப்புணர்வு
பெரம்பலூர் மாவட்டம், அனுக்கூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடையே பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவ மாணவிகளிடம் பேசிய காவல் ஆய்வாளர் அவர்கள் குழந்தை திருமணம், போக்சோ சட்டம், கல்வியின் முக்கியத்தும், பெண்கல்வியின் அவசியம், பள்ளியில் இடைநின்ற மாணவ மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது ஆகியவை குறித்து விரிவான விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செயல்படும் உதவி எண்களான பெண்கள் உதவி மையம் இலவச தொலைபேசி எண் 181 Women Help Desk 112 குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 பள்ளி குழந்தைகளின் பாதுகாப்பிற்காக செயல்படும் இலவச உதவி எண் 14417 முதியோர் உதவி எண்கள் 14567 சைபர் கிரைம் உதவி எண்கள் 1930 ஒவ்வொரு மாணவிகளும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்து தங்களது பெற்றோர்களிடம் அச்சமின்றி தெரிவித்து அதற்கான தீர்வினைப் பெற வேண்டும் என்றும் அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மாணவிகள் ஒவ்வொருவருக்கும் தொடுதல் குறித்த விழிப்புணர்வு (GOOD TOUCH BAD TOUCH) ஏற்படுத்தப்பட்டது