கரூரில் காத்திருக்கும் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு காவல்துறை குவிப்பு.

கரூரில் காத்திருக்கும் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு காவல்துறை குவிப்பு.

Update: 2024-08-08 07:41 GMT
கரூரில் காத்திருக்கும் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு காவல்துறை குவிப்பு. இனாம்நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு, மனை உரிமையாளர்கள் இயக்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், இனாம் ஒழிப்பு சட்டத்தின் வாயிலாக பெற்ற ராயத்து வாரி பட்டாவை கருத்தில் கொள்ளாமல், கரூர் டிஆர்ஓ பிறப்பித்த சட்டவிரோத உத்தரவை ரத்து செய்யும் வரை தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து, இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள திருமண மண்டபம் அருகே மேற்கண்ட அமைப்பைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்திற்காக வந்திருந்தனர். இந்தப் போராட்டத்தை நடத்தக் கூடாது என காவல்துறையினர் ஏற்கனவே அனுமதி மறுத்துள்ள நிலையில், காவல்துறை உத்தரவை மீறி ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், போராட்டக்காரர்களை சமாளிக்க தேவையான காவல்துறையினரை களத்தில் பணியாற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உத்தரவிட்டதன் பேரில், கரூர் காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் தலைமையிலான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டதால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News