கொடைக்கானல் தாண்டிக்குடி பகுதியில் உள்ள மண்டல காபி ஆராய்ச்சி நிலையத்தில் காபி வாரிய தலைவர் மற்றும் காபி பங்குதாரர்கள் மற்றும் விவசாயிகள் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது,

வரும் ஐந்து ஆண்டுகளில் ஐந்தரை டன் காப்பி பயிர்களை விளைவிக்க பல யுக்திகள் கையாள இருப்பதாகவும் பேட்டி.

Update: 2024-08-08 13:20 GMT
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமங்களில் ஒன்றாக தாண்டிக்குடி கிராமம் உள்ளது, இந்த கிராமத்தில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் மண்டல காபி ஆராய்ச்சி நிலையம் அமைந்துள்ளது, இந்நிலையில் கொடைக்கானல் மற்றும் கீழ் பழனி மலையை சேர்ந்த காபி பங்குதாரர்களுக்கும், காபி வாரிய தலைவர் மற்றும் மலைக்கிராம விவசாயிகளும் இடையே கலந்துரையாடல் நடைபெற்றது, இந்த கலந்துரையாடலில் காபி விவசாயத்தை உலக அளவில் பிரசித்தி பெற வைப்பது குறித்தும் விளைச்சல் மற்றும் விலை அதிகரிக்க செய்ய பின்பற்ற வேண்டிய எளிய வழி முறைகள் மற்றும் பருவ நிலை மாற்றத்தால் காபி பயிர்களை நோய் தாக்கம் இல்லாமல் பாதுகாப்பது எப்படி, அதே போல மானியங்கள் கிடைக்க விண்ணப்பம் செய்வது குறித்தும், அக்டோபர் 1 ஆம் தேதி அகில இந்திய காபி தினத்தை தாண்டிக்குடி ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்பாக கொண்டாட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கருத்துக்கள் விவாதிக்கப்பட்டது, மேலும் காபி பங்குதாரர்கள் மற்றும் விவசாயிகள் எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் அவர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வண்ணம் காபி வாரிய தலைவர் விளக்கம் அளித்தார்,மேலும் காபி பயிர்களை அதிகமாக விளைவிக்க மத்திய அரசின் உதவியோடு, தரமான காபி பயிர்களை உற்பத்தி செய்து, அதனை கொண்டு செல்லும் வழிகளை காபி மண்டல தலைவர் முன்னெடுத்து இருப்பதாகவும்,மண் முதல் காபி இலை வரை துல்லியமாக தரக்கட்டுப்பாட்டினை அதிகப்படுத்தி,வரும் 5 வருடத்தில் ஐந்து அரை காபி டன் பயிர்களை உற்பத்தி செய்ய பல புது வித தொழில்நுட்பத்துடன் கையாள இருப்பதாகவும், மத்திய அரசு காபி வாரியத்திற்கு கடந்த வருடத்தில் 6.7 கோடி மானியம் வழங்கப்பட்ட நிலையில்,தற்போது 8.5 கோடி மானியம் வழங்க இருப்பதாகவும்,இதனை விவசாயிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு மண்டல காபி வாரிய துணை இயக்குனர் பேட்டியளித்தார்,இந்நிகழ்வில் மண்டல காபி வாரிய தலைவர் தினேஷ் உள்ளிட்ட உறுப்பினர்கள், காபி பங்குதாரர்கள், விவசாயிகள் என 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News