கிடைக்காரன் பாளையத்தில் வீடு தீப்பிடித்து ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்.

கிடைக்காரன் பாளையத்தில் வீடு தீப்பிடித்து ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம்.

Update: 2024-08-08 14:46 GMT
கிடைக்காரன் பாளையத்தில் வீடு தீப்பிடித்து ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசம். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, காட்டுமுன்னூர் அருகே உள்ளது கிடைக்காரன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி வயது 62. இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீடும் இவரது மகன் மணிவேல் என்பவரது வீடும் அருகருகே உள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 5ஆம் தேதி காலை 11 மணியளவில் சொந்த வேலையாக அருகிலுள்ள க. பரமத்திக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் மணிவேலின் வீடு திடீரென தீ பற்றியது. அதிர்ச்சடைந்த மணிவேல் இது குறித்து ராமசாமிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் தெரிந்தவுடன் தனது வீட்டுக்கு திரும்பிய ராமசாமி சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். பிறகு அவரது வீட்டை ஆய்வு செய்த போது, வீட்டில் வைத்திருந்த பொருட்கள், அடையாள அட்டை, ஆர்சி புத்தகம் மற்றும் ஆவணங்கள், பர்னிச்சர் பொருட்கள், துணிகள், ரூபாய் 40 ஆயிரம் என ஒரு லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தென்னிலை காவல்துறையினர்.

Similar News