தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் இதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் தமிழக மீனவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.