கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாதந்தோறும் கல்லூரி மாணாக்கர்களுக்கு ரூ ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம்.
கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாதந்தோறும் கல்லூரி மாணாக்கர்களுக்கு ரூ ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம்.
கரூர் அரசு கலைக் கல்லூரியில் மாதந்தோறும் கல்லூரி மாணாக்கர்களுக்கு ரூ ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் துவக்கம். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்தை இன்று தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோவையில் துவக்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலைக் கல்லூரியில் காணொளி காட்சி வாயிலாக இந்த திட்டத்தை துவக்கி வைத்துள்ளார். இதனடிப்படையில் கரூர் தாந்தோணி மலைப்பகுதியில் செயல்படும் அரசு கலை அறிவியல் கலைக்கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில், தமிழ் புதல்வன் திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம், கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணைமேயர் தாரணி சரவணன், கரூர் மாநகராட்சி மண்டல தலைவர் கனகராஜ், உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.