காந்திநகர் அருகே நடந்து சென்ற முதியவர் மீது வேகமாக பெண் ஓட்டி வந்த டூவீலர் மோதி விபத்து.
காந்திநகர் அருகே நடந்து சென்ற முதியவர் மீது வேகமாக பெண் ஓட்டி வந்த டூவீலர் மோதி விபத்து.
காந்திநகர் அருகே நடந்து சென்ற முதியவர் மீது வேகமாக பெண் ஓட்டி வந்த டூவீலர் மோதி விபத்து. கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி வயது 65. இவர் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை 6:30- மணி அளவில் காந்தி நகரில் இருந்து கந்தம்பாளையம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, காந்திநகர் 13வது தெரு அருகே நடந்து சென்ற போது, கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம், நடையனூர் அருகே கோம்பிபாளையம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் மனைவி சம்யுக்தா வயது 33 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூவீலர், நடந்து சென்ற ராமசாமி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயம் அடைந்த ராமசாமியை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ராமசாமியின் உடன் பிறந்த சகோதரர் சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் டூவீலரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய சம்யுக்தா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.