காமக்காப்பட்டியில் டீ குடித்து கொண்டிருந்தவர் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து.
காமக்காப்பட்டியில் டீ குடித்து கொண்டிருந்தவர் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து.
காமக்காப்பட்டியில் டீ குடித்து கொண்டிருந்தவர் மீது வேகமாக வந்த கார் மோதி விபத்து. கரூர் மாவட்டம், மூக்கனாங்குறிச்சி, அம்மைய கவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி வயது 43. இவரது நண்பர் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியைச் சேர்ந்த லோகநாதன் வயது 42. இவர்கள் இருவரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், கரூர் - திண்டுக்கல் சாலையில் காமக்காப்பட்டி, பெட்ரோல் பங்க் அருகே உள்ள கருப்பட்டி ராஜா காபி கடையில் டீ சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, கோவை மாவட்டம், சூலூர், கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெயபிரகாஷ் வயது 35 என்பவர் ஓட்டி வந்த கார், டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த லோகநாதன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் லோகநாதனுக்கு வலது காலில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால் உடனடியாக அவரை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம், கரூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கந்தசாமி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், கவன குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ஜெயபிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் அரவக்குறிச்சி காவல்துறையினர்.