மன்மங்கலம் அருகே டூவீலரில் செல்லும்போது மணல் சறுக்கியதால் கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம்.

மன்மங்கலம் அருகே டூவீலரில் செல்லும்போது மணல் சறுக்கியதால் கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம்.

Update: 2024-08-10 12:41 GMT
மன்மங்கலம் அருகே டூவீலரில் செல்லும்போது மணல் சறுக்கியதால் கீழே விழுந்து விபத்து. ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, தோட்டக்குறிச்சி, ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் வயது 45. இவர் ஆகஸ்ட் 8ஆம் தேதி மாலை 4:15- மணியளவில், சேலம் - கரூர் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் மன்மங்கலம் காளியம்மன் கோவில் எதிரே சென்றபோது, டூவீலரை வேகமாக இயக்கியதால், சாலையோர மணலில் புதைந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தலை, நெற்றி, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள அமராவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த முருகானந்தத்தின் மகன் நரேஷ் வயது 21 என்பவர் அளித்த புகார் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய முருகானந்தம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் வாங்கல் காவல்துறையினர்.

Similar News