அம்மா சாலை அருகே தடை செய்த லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தவர் கைது.

அம்மா சாலை அருகே தடை செய்த லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தவர் கைது.

Update: 2024-08-10 13:04 GMT
அம்மா சாலை அருகே தடை செய்த லாட்டரி டிக்கெட் விற்பனை செய்தவர் கைது. கரூர் மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கள்ள லாட்டரி டிக்கெட் விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துசாமி, ஆகஸ்ட் 8ஆம் தேதி கரூர் நகர பகுதிக்குள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அருகில் உள்ள அம்மா சாலை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட் விற்பனை நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விற்பனையில் ஈடுபட்ட கரூர், மின்னாம்பள்ளி அருகே அருவந்தூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் வயது 42 என்பவரை கைது செய்து, அவர் விற்பனைக்கு வைத்திருந்த 18 லாட்டரி டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக ஆனந்தன் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Similar News