தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேசியக்கொடி ஏற்றி பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-08-11 04:12 GMT
பெரம்பலூர் மாவட்ட மத்திய மாநில தொழிற்சங்கங்களில் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அகஸ்டின் தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்ட தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் முதலில் தேசிய கொடியை ஏற்றி, பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது அவர்கள் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். புதிய தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை கைவிட வேண்டும். மத்திய-மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங் களை நிரப்பிட வேண் டும். நிரந்தர தன்மை வாய்ந்த பணியிடங்களில் அவுட்சோர் சிங் ஒப்பந்த முறையை ரத்து செய்திட வேண்டும். 10 ஆண்டு காலமாக கூட்டப்படாமல் உள்ள இந்திய தொழிலாளர் மாநாட்டை உடனடியாக நடத்திட வேண்டும். 40 கோடி முறை சாரா தொழிலாளர்களுக்கு தேசிய சமூக பாது காப்பு நிதியத்தை உருவாக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை நிறைவேற்ற மத்திய- மாநில அரசுகளை வலியு றுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் எல்.பி.எப்., சி.ஐ.டி. யு., ஏ.ஐ.டி.யு.சி., ஐ.என்.டி. யு.சி. எச்.எம்.எஸ்., எச்.எம்.எஸ்., எல்.எல். எப்., எஸ்.டி.யு, எம்.எல்.எப். ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

Similar News