வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

போலீசார் விசாரணை

Update: 2024-08-13 07:43 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, புதுக்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 35). இவருக்கு வசந்தா (30) என்ற மனைவியும், ஜீவா (13), பசுபதி (10) என்ற 2 மகன்களும் உள்ளனர். இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படு கிறது. இதனால் இவர் வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் மனம் உடைந்த செல்வராஜ் வயலுக்குச் சென்று மரக்கிளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Similar News