சேலத்தில் த.மா.கா. உறுப்பினர் சேர்க்கை முகாம்

புறநகர் மாவட்டம் சார்பில்

Update: 2024-08-13 10:00 GMT
த.மா.கா. உறுப்பினர் சேர்க்கை முகாம் அயோத்தியாப்பட்டணம் வட்டாரத்துக்கு உட்பட்ட குப்பனூரில் நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட தலைவர் வக்கீல் செல்வம் தலைமை தாங்கி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். கொங்குமண்டல த.மா.கா. எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் எம்.சின்னத்துரை, புறநகர் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.விஸ்வநாதன், தொழிற்சங்க தலைவர் வி.எம்.சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார தலைவர் பி.தனபால் வரவேற்றார். நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், முனுசாமி, அகிலன், வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார துணைத்தலைவர் அன்புரோஸ் நன்றி கூறினார். இந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரை நடைபெற இருப்பதாகவும், தொகுதிக்கு 5 ஆயிரம் பேரை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புறநகர் மாவட்ட தலைவர் வக்கீல் செல்வம் தெரிவித்தார்.

Similar News