தொட்டியபட்டியில், போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்ற தொடக்கப்பள்ளி மாணாக்கர்கள்.
தொட்டியபட்டியில், போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்ற தொடக்கப்பள்ளி மாணாக்கர்கள்.
தொட்டியபட்டியில், போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்ற தொடக்கப்பள்ளி மாணாக்கர்கள். கரூர் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டிய பட்டி தொடக்க பள்ளியில் 95 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். நேற்று காலை பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை, தமிழக அரசின் வழிகாட்டுதல் படி எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது தலைமை ஆசிரியர் மூர்த்தி போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கி கூறி, மாணாக்கர்களை போதை பொருள் பயன்படுத்துவதற்கு எதிரான உறுதி மொழியை ஏற்க செய்தார். அப்போது, நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன் என்றும் எனது நண்பர்களையும் , குடும்பத்தினரையும் போதை பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு அறிவுரை வழங்குவேன் எனவும், போதைக்கு ஆளானவர்களை மீட்டெடுக்க உதவுவேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்கவும் , மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன் என உறுதிமொழியை மாணாக்கர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், மற்றும் இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.