திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது.இதன் காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் 113.65 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 117.45 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 69.40 அடியாக உள்ளது. இதனால் தாமிரபரணியில் இருந்து குடிநீர் பெறும் தென் மாவட்ட பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.