நெல்லை மாநகரில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில் முன்பு மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. எப்பொழுது மழை பெய்தாலும் இப்படி மழை நீர் தேங்கி விடுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அவதி அடைந்துள்ளனர்.