தமிழக முதலமைச்சர் திறந்து வைத்த மரகத பூஞ்சோலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
தமிழக முதலமைச்சர் திறந்து வைத்த மரகத பூஞ்சோலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
தமிழக முதலமைச்சர் திறந்து வைத்த மரகத பூஞ்சோலையை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில் உள்ள அரசு நிலங்களில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின்கீழ் உருவாக்கப்பட்டுள்ள 75 மரகதப்பூஞ்சோலைகளை திறந்து வைத்தார். இச்சோலைகள் ஒவ்வொன்றும் ஒரு ஹெக்டர் பரப்பளவை கொண்டிருக்கும் என்றும், நீர்நிலையை மேம்படுத்தி சூழிலியல் சேவைகளை வழங்குவதோடு பல்வேறு பொழுதுபோக்கு வசதிகளையும் வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மக்களின் பங்கேற்புடன் தமிழ்நாட்டின் 29 மாவட்டங்களில். அரசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு இதுவரை மொத்தம் 75 எண்ணிக்கையிலான மரகதப்பூஞ்சோலைகள் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் உருவாக்கம் செய்யப்பட்டு, இன்று 75 மரகதப்பூஞ்சோலைகளை காணொளி காட்சி வாயிலாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்துவைத்தார். கரூர் மாவட்டத்தில் தரகம்பட்டி, நல்லமுத்து பாளையம், பேரூர் உடையாபட்டி ஆகிய மூன்று கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டு ஒரு கிராமத்திற்க்கு ரூ.23.824/- இலட்சம் என்ற விகிதத்தில் மூன்று கிராமங்களுக்கு ரூ.71.472/- இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இரண்டு வருடம் பராமரிப்பு செய்யப்பட்டதுடன், அந்தந்த கிராம ஊராட்சிகளிடம் தொடர் பராமரிப்பு செய்யும் பொருட்டு ஒப்படைப்பு செய்யப்படும். செடி நடவு பணிகள்கீழ் மூன்று மரகதப்பூஞ்சோலைகளிலும் மொத்தம் 2064 எண்ணிக்கையிலான தடி மரங்கள் மற்றும் பழ மரங்கள், மருத்துவ தாவர மரங்கள் நடவுசெய்யப்பட்டு, ஆழ் துளை கிணறு அமைக்கப்பட்டு பூங்காவில் ஆங்காங்கே அமரும் நீள சாய்வு மேசைகள், பார்வையாளர் அமரபகுதி நிரந்தரச்கூடம், நடைபாதைகள் போன்றவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இப்பூங்கவில் மர இனங்களான ஆல், அரசு, அத்தி, நாவல், நெல்லி, நீர்மருது, பாதம், இலுப்பை, வில்லம், விளாம், பூவரசு, கொய்யா, மா, மகிழம், புன்னை, கொடுக்கா புளி, வேம்பு, புங்கன் முதலியன நடவு செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மரகதப்பூஞ்சோலைகளில் தரகம்பட்டியில் அமைந்துள்ள மரகதப்பூஞ்சோலையை கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் பார்வையிட்டார். இந்நிகழ்வின் போது பஞ்சாயத்து தலைவர் வேதவள்ளி, மாவட்ட வன அலுவலர் சண்முகம், வட்டாட்சியர் இளம்பருதி, கிராம பொதுமக்கள், குழந்தைகள் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.