கரூரில் பாஜகவினர் தேசிய கொடி ஏந்தி நடத்திய இரு சக்கர வாகன பேரணியில் தலைகவசம் அணியாமலும், தேசிய கொடியினை வாகனங்களில் கட்டிச் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் வாக்குவாதம்

கரூரில் பாஜகவினர் தேசிய கொடி ஏந்தி நடத்திய இரு சக்கர வாகன பேரணியில் தலைகவசம் அணியாமலும், தேசிய கொடியினை வாகனங்களில் கட்டிச் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

Update: 2024-08-14 12:34 GMT
கரூரில் பாஜகவினர் தேசிய கொடி ஏந்தி நடத்திய இரு சக்கர வாகன பேரணியில் தலைகவசம் அணியாமலும், தேசிய கொடியினை வாகனங்களில் கட்டிச் செல்ல காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. கரூர் மாவட்ட பாஜக சார்பில் இரு சக்கர வாகன பேரணி நடத்த திட்டமிடப்பட்டு, கரூர்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிஜேபி அலுவலகத்தில் பாஜகவினர் திரண்டனர். அங்கிருந்த இரு சக்கர வாகன பேரணி செல்ல முற்பட்ட போது, அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதுடன், நீதிமன்றம் உத்தரவிற்காக காத்திருப்பதாகவும், அதன் பிறகு இரு சக்கர வாகன பேரணியில் இரு சக்கர வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக செல்லலாம் என அறிவுறுத்தினர். இதனால், பாஜகவினர் வாகனங்களை சாலையின் ஓரமாக நிறுத்தி காத்திருந்தனர். சிறிது நேரத்திற்குப் பிறகு காவல்துறை அதிகாரிகள், வாகனத்தில் தேசிய கொடியினை கட்டக் கூடாது, பின்னால் அமர்ந்திருப்பவர்கள் தேசிய கொடியினை ஏந்திச் செல்லலாம் என தெரிவித்தனர். இதனால், பாஜகவினருக்கும், காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து புறப்பட்ட இரு சக்கர வாகன பேரணி திருக்காம்புலியூர் ரவுண்டானா, கோவை சாலை, பேருந்து நிலையம் சென்று மனோகரா கார்னரில் அமைந்துள்ள காமராஜரின் சிலைக்கு பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து புறப்பட்ட பேரணி ஜவஹர் பஜார் வழியாக சுபாஸ்சந்திரபோஸ் சிலை அருகே முடிவடைந்தது. பின்னர், சுபாசந்திரபோஸ் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Similar News