நாட்டின் 78வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு திருநெல்வேலி மாநகராட்சி மைய அலுவலகத்தில் கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சியின் மேயர் ராமகிருஷ்ணன் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின்னர் அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார். இந்த நிகழ்வின் போது மாநகராட்சி துணை மேயர் ராஜு, மாநகராட்சி ஆணையாளர் சுக புத்ரா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.