கரூரில் சுதந்திரத் திருநாளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து உறுதிமொழி ஏற்ற காங்கிரஸ் கட்சியினர்.
கரூரில் சுதந்திரத் திருநாளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து உறுதிமொழி ஏற்ற காங்கிரஸ் கட்சியினர்.
கரூரில் சுதந்திரத் திருநாளில் தேசியக்கொடி ஏற்றி வைத்து உறுதிமொழி ஏற்ற காங்கிரஸ் கட்சியினர். கரூர் லைட் ஹவுஸ் கார்னர், அமராவதி பாலம் அருகே, 78வது இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு, தேசிய கொடியை ஏற்றி வைத்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் உறுதிமொழி ஏற்றனர். இந்த நிகழ்ச்சியில் கரூர் மா மன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவருமான ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் நகர தலைவர் வெங்கடேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பல்வேறு உறுதிமொழிகளை ஏற்றனர். அப்போது, மாநிலத்தின் உரிமைகளை மீட்போம் எனவும், மதவாத சக்திகளை முறியடிப்போம் எனவும், ஜனநாயகத்தையும் தேசிய ஒற்றுமையையும், மத நல்லிணக்கத்தையும் காப்போம் எனவும், நாட்டின் இறையாண்மையை பாதுகாப்போம் எனவும் பல்வேறு உறுதிமொழிகளை ஏற்றனர்.