இரு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

இரு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

Update: 2024-08-15 12:35 GMT
இரு சக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் சங்கம் சார்பில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. நாட்டின் 78 வது சுதந்திர தின விழாவை நாடெங்கும் பல்வேறு தரப்பினரும் கொண்டாடி வருகின்றனர். இந்திய விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்திய தலைவர்களில் முக்கியமானவர் மகாத்மா காந்தி. மகாத்மா காந்தியின் அஹிம்சை கொள்கைப்படி, நாடு சுதந்திரம் அடைந்தது. இறுதிவரை தனது நிலையிலிருந்து பின் வாங்காமல் சுதந்திர வேட்கையினை அனைவருக்கும் ஏற்படுத்தி,அதை ஒருமுகப்படுத்தி ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரத்தை பெற்றுத் தந்த தேசத்தந்தை மகாத்மா காந்தி. இன்று கரூர் லைட் ஹவுஸ் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி முழு திரு உருவ சிலைக்கு, கரூர் மாவட்ட காந்தி மகான் இருசக்கர மோட்டார் வாகன பழுது நீக்குவோர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ராஜ குமரேசன் தலைமையில் மகாத்மா காந்தி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் இனியா மணி, பாஸ்கர், பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேச தந்தைக்கு மரியாதை செய்யும் நிகழ்வை சிறப்பித்தனர்.

Similar News