அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
காவிரி கரையோர பொது மக்களுக்கு அதிமுகவினர் நிவாரண பொருட்களை வழங்கினர்
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக, மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை நிரம்பியதை அடுத்து கர்நாடகா மாநில கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணை ஆகியவற்றிலிருந்து வந்த உபரி நீர் அதிகபட்சமாக 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி வீதம் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பள்ளிபாளையம் பகுதியில் உள்ள ஆவரங்காடு, ஜனதா நகர், நாட்டான்கவுண்டர் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கரையோரமாக வசித்து வந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கும் குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி அவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு மற்றும் உடுத்த உடைகள் வழங்கினார்.நகர அதிமுக செயலாளர் பி.எஸ்.வெள்ளியங்கிரி, ஒன்றிய சேர்மன் செந்தில், வார்டு உறுப்பினர்கள் என ஏராளமான கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.