கோவிந்தம் பாளையத்தில் மாமனா! மச்சானா! மானங்கெட்டவனே! மாணவனின் பேச்சால் எகிறிய கரவொலி.

கோவிந்தம் பாளையத்தில் மாமனா! மச்சானா! மானங்கெட்டவனே! மாணவனின் பேச்சால் எகிறிய கரவொலி.

Update: 2024-08-15 16:19 GMT
,மாமனா! மச்சானா! மானங்கெட்டவனே! மாணவனின் பேச்சால் எகிறிய கரவொலி. கரூர் மாவட்டம், தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, கோவிந்தம்பாளையம்,ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று சுதந்திர தின விழா கொண்டாட்டம் தலைமை ஆசிரியர் புஷ்பா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோபிநாத் உள்ளிட்ட இருபால் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற சுதந்திர தின நிகழ்ச்சியில் பேச்சுப்போட்டி, நடன போட்டி, சிலம்பாட்ட போட்டி, வில்லுப்பாட்டு போட்டி நடத்தி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். மேலும் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்கள் குறித்து மாணவர்கள் குறிப்புரை வழங்கினர். அப்போது ஒரு மாணவன் வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழ் திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த காட்சியை மாணவன் ஒருவன் பேசி காட்டினான். அப்போது ஹிஸ்தி,திரை, வரி, வட்டி, வானம் பொழிகிறது பூமி விளைகிறது உனக்கேன் கொடுக்க வேண்டும் வரி? என்ன செய்தாய் நீ? நாத்து நட்டாயா? களைப்பறித்தாயா ? அல்லது கொஞ்சி விளையாடும் எம் குல பெண்களுக்கு மஞ்சள் அரைத்தாயா? மாமனா! மச்சானா! மானங்கெட்டவனே! யாரைக் கேட்கிறாய் வரி? என பேசியதால், அனைவரும் கரவொலி எழுப்பி அந்த சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News