சின்ன பேடப்பள்ளி கிராமத்தில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடை பெற்றது
சின்ன பேடப்பள்ளி கிராமத்தில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடை பெற்றது
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சூளகிரி ஊராட்சி ஒன்றியம், இம்மிடிநாயக்கனப்பள்ளி ஊராட்சி, சின்ன பேடப்பள்ளி கிராமத்தில் கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் நடை பெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஊராட்சி ஒன்றியம், இம்மிடிநாயக்களப்பள்ளி ஊராட்சி, பேடப்பள்ளி கிராமத்தில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு, கிராம சனப கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப, அவர்கள் தெரிவித்ததாவது: இந்திய நாட்டின் சுதந்திர தின விழாவை முன்னிட்டு நமது மாவட்டத்தில் உள்ள 333 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செல்லினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்தும், இணையவழி வரி செலுத்தும் சேவை குறித்தும், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல் குறித்தும், சுயசான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் குறித்தும், தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு குறித்தும், தமிழ்நாடு உயிரி பல்வகை வாரியம் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்தும், தூய்மை பாரத இயக்கம் குறித்தும், ஜல் ஜீவன் இயக்கம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், நமது மாவட்டத்தில் இளம் வயது திருமணத்தை தடுத்து, பெண்கல்வியை ஊக்குவிக்க வேண்டும். தற்போது பெண்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு 6 முதல் 12 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த பெண்களுக்கு உயர்கல்வி பயில புதுமைப்பென் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தங்களது பெண் குழந்தைகளை உயர் கல்வி படிக்க வைக்க வேண்டும். கல்வி கற்றால் தான் சமுதாயத்தில் நாம் முன்னேற்றம் அடைய முடியும். தங்களுடைய குழந்தைகளான ஆண் மற்றும் பெண் குழந்தைகளை கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். நமது மாவட்டத்தில் குழந்தை திருமணம் மற்றும் கரு கலைப்பு போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ., அவர்கள் தெரிவித்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அயோடி உப்பு பயன்பாடு குறித்த உறுதிமொழியை பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் எடுத்துக்கொளண்டனர். முன்னதாக, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 இலட்சம் மதிப்பில் 4 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்குகான ஆணைகளை வழங்கினார்.