பவித்திரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.
பவித்திரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.
பவித்திரம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்த மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்தது. அதன் அடிப்படையில், கரூர் மாவட்டம் கா பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பௌத்திரம் ஊராட்சி சார்பாக சிறப்பு கிராம சபை கூட்டம் பாலமலை கோவில் அடிவாரத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஊராட்சி மன்ற செயலாளர் செந்தில்குமார், வேளாண் துறை சார்ந்த சசிகலா, கால்நடைத்துறை சேர்ந்த அபிராமி, சமூக நலத்துறை சேர்ந்த சித்ரா மற்றும் சாலபாளையம் தலைமை ஆசிரியர் சிவக்குமார் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தனர்.