நுகர்வோர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கிய சார் ஆட்சியர்
கட்டுரை மற்றும் ஓவியப்போட்டி
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நுகர்வோர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக பள்ளி கல்லூரி மணாக்கர்களுக்கு நடத்தப்பட்ட கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு சார் ஆட்சியர் திரு.சு.கோகுல் பரிசு மற்றும் சான்றிதழ்களை (16.08.2024) வழங்கினார். நுகர்வோர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட கட்டுரை போட்டியில் முதலிடம் பிடித்த தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று வரும் பிரவீன்தாஸ் என்ற மாணவனுக்கு ரூ.2,500க்கான காசோலை மற்றும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும், இரண்டாமிடம் பிடித்த வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு இயற்பியல் பயின்று வரும் வே.பிரியதர்ஷினி என்ற மாணவிக்கு ரூ.1,500 க்கான காசோலை மற்றும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும், மூன்றாமிடம் பிடித்த சத்திரமனை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வரும் சமா பேகம் என்ற மாணவிக்கு ரூ.1,000க்கான காசோலை மற்றும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும், அதேபோல ஓவியப் போட்டியில் முதலிடம் பிடித்த செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு பயின்று வரும் இலக்கியா என்ற மாணவிக்கு ரூ.2,500 க்கான காசோலை மற்றும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும், இரண்டாமிடம் பிடித்த தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரியில் மூன்றாமாண்டு பயின்று வரும் ஆ.பேன்சி லியோனி என்ற மாணவிக்கு ரூ.1,500 க்கான காசோலை மற்றும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும், மூன்றாமிடம் பிடித்த வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாமாண்டு கணினி அறிவியல் பயின்று வரும் கதிரேசன் என்ற மாணவனுக்கு ரூ.1,000 க்கான காசோலை மற்றும் வெற்றி பெற்றதற்கான சான்றிதழையும் சார் ஆட்சியர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து நுகர்வோர் மன்றத்திற்காக சிறப்பாக செயல்பட்டு வரும் சாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை பாராட்டி பரிசுத் தொகையாக ரூ.5,000க்கான காசோலையை சார் ஆட்சியர் வழங்கினார்.