தண்ணீர்பந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
தண்ணீர்பந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிளை எம்எல்ஏ துவக்கி வைத்தார்.
தண்ணீர்பந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிளை எம்எல்ஏ துவக்கி வைத்தார். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பௌத்திரம் குளத்து பாளையம் பகுதியில் தண்ணீர் பந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிளையை அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் க.பரமத்தி வடக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினருமான கார்த்தி, சக்திகோச் நடராஜன், மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் கந்தராஜா, உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க அலுவலர்கள், கூட்டுறவு சங்க உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கு கால்நடை பராமரிப்பு கடன் பெரும்பாலோனாருக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார் அரவக்குறிச்சி எம்எல்ஏ இளங்கோ. பிறகு அங்கு கூடியிருந்தவர்களிடையே பேசும்போது, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் பொது மக்களுக்கும் குறிப்பாக கிராம மக்களுக்கு பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் மட்டும் 25 பகுதி நேர கூட்டுறவு கடைகளை திறந்து உள்ளோம். இதற்கு மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர் கந்தராஜா பேருஉதவியாக தனது பணிகளை எளிமைப்படுத்தியதாக தெரிவித்தார்.