திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கக்கன்நகரில் நேற்று நடைபெற்ற கோயில் கொடை விழாவில் இரு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மதி ராஜா (35) மதியழகன் (40) ஆகியோர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டனர். இவர்கள் உடன்பிறந்த சகோதரர்கள் ஆவார்கள். மேலும் மகேஸ்வரன்(41) என்பவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த இரட்டை கொலை குறித்து திசையன்விளை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.