கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து
சேலத்தில் தனியார் மருத்துவமனை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பயிற்சி டாக்டராக இருந்த பெண், பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்டார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவத்தை கண்டித்து, சேலம் கே.என்.ராவ் மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து கே.என்.ராவ் மருத்துவமனை நிர்வாகி ரேஷ்மி ராவ் கூறும் போது, பயிற்சி டாக்டராக இருந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும். இரவு நேரங்களில் பெண் டாக்டர்கள், பெண் ஊழியர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசு சட்டம் இயற்ற வேண்டும். மேலும் மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் உரிய பாதுகாப்பை அரசு உறுதிப்படுத்த வேண்டும்’ என்றார். இந்த ஆர்ப்பாட்டம் நோயாளிகள் பாதிக்கப்படாத வகையில் நடந்தது.