எடப்பாடி அருகே ஸ்ரீ ஐயனாரப்பன் ஸ்ரீ புடவை காரி அம்மன் கும்பாபிஷேக விழா

எடப்பாடி அருகே சின்ன முத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஐயனாரப்பன் ஸ்ரீ புடவை காரி அம்மன் கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.

Update: 2024-11-15 16:21 GMT
சேலம் மாவட்டம் எடப்பாடி வட்டம் சின்னமுத்தூர் கிராம பகுதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஐயனாரப்பன், ஸ்ரீ புடவை காரி அம்மன், ஸ்ரீ பாப்பாத்தி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகள் கோவிலில் புனராவர்த்தன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை இன்று அதிகாலையில் வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக கோவில் முன்பு அமைக்கப்பட்ட பிரமாண்டமான யாகசாலையில் கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு யாக சாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை கல்வடங்கம் காவிரி ஆற்றில் இருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்தங்களை யாகசாலையில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து சிவாச்சாரியார்கள் புனித தீர்த்தங்களை எடுத்துக்கொண்டு கோவிலில் சுற்றி வந்து கோபுர கலசத்திற்கு  புனித தீர்த்தம் ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்து தீபாராதனை காட்டினர். தொடர்ந்து பக்தர்களின் மீது பூக்கள் மற்றும் தீர்த்தம் தெளிக்கப்பட்டது கும்பாபிஷேகத்தில் சின்னமுத்தூர் கிராமம் சுற்று வட்டாரப்  பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

Similar News