உடுமலையில் ரத்தின லிங்கேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா-

திரளான பக்தர்கள் பங்கேற்பு

Update: 2024-11-15 15:29 GMT
திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் உள்ள தில்லை நகர் ரத்தினலிங்கேஸ்வரர் கோவில்,உள்ளிட்ட சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.அப்போது சிவபெருமான் மற்றும் நந்தியம் பெருமானுக்கு பால், தயிர், சந்தனம், மஞ்சள், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.அதைத் தொடர்ந்து அன்னத்தைக் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.இதையடுத்து சிவபெருமான் அன்னம், காய்கறிகள்,பழங்களுடன் கூடிய சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.பக்தர்கள் சிவன் பாடல்களை பாடியும் நமசிவாய என்ற பஞ்சாட்சர மந்திரத்தை கூறியும் வழிபாடு செய்தனர்.விழாவை யொட்டி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த அன்னத்தைக் கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. இதே போன்று மடத்துக்குளம் அர்ச்சேனஷ்வரர் கோயில் ,சிவசக்திகாலனியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயில் உட்பட உடுமலை சுற்றுப்புற கிராமங்களில் உள்ள சிவாலயங்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Similar News