சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனையில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் ‘தாயின் பெயரில் ஓர் மரம்’ என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. சுற்றுச்சூழலை பாதுகாத்து மேம்படுத்த மத்திய அரசு, அனைவரும் மரக்கன்றுகளை நடுவதற்கு அறிவுறுத்தி உள்ளதன் அடிப்படையில் நடந்த இந்த விழாவிற்கு துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டுவைத்தார். மேலும் துறையின் சார்பில் சேலத்தின் பல்வேறு பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன், பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துறையின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசேகர் மற்றும் ஜெயபாலன் ஆகியோர் செய்திருந்தனர்.