கடை திறப்பு விழாவை முன்னிட்டு பண்டுதகாரன் புதூரில் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம்.
கடை திறப்பு விழாவை முன்னிட்டு பண்டுதகாரன் புதூரில் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம்.
கடை திறப்பு விழாவை முன்னிட்டு பண்டுதகாரன் புதூரில் ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம். கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், மண்மங்கலம் அருகே உள்ளது பண்டுதகாரன் புதூர். இப்பகுதியில் ஆர் கே மெஸ் & ரெஸ்டாரன்ட், மண்பானை சமையல், குகன் மஹால் ஏசி வசதியுடன் புதிதாக கட்டப்பட்டு இன்று திறப்பு விழா நடைபெற்றது. அனைத்து அம்சங்களுடன் கூடிய புதிய நிறுவனமாக இன்று திறப்பு விழா கண்ட இந்த நிறுவனத்தில் திறந்த வெளி திரையரங்கம், மண்பானை சமையல், திறந்தவெளி ரெஸ்டாரன்ட், ஏசி வசதியுடன் கூடிய ரெஸ்டாரன்ட், சுப காரியங்கள் நடத்துவதற்கு குகன் மஹால், குழந்தைகள் விளையாடுவதற்கு பல்வேறு உபகரணங்களுடன் கூடிய விளையாட்டு திடல் என அனைத்தும் ஒரே வளாகத்திற்குள் அமைக்கப்பட்டு இன்று பிரமாண்டமாக திறப்பு விழா செய்யப்பட்டது. திறப்பு விழாவை முன்னிட்டு சிக்கன் பிரியாணி ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் எனவும் அத்துடன் ஸ்வீட் தயிர் பச்சடி தால்சா இலவசமாகவும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல மட்டன் பிரியாணி வாங்கினால் சிக்கன் சில்லி, ஸ்வீட் தயிர் பச்சடி தால்சா இலவசமாக வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இந்த வளாகத்திலேயே பேக்கரி வசதியும் உள்ளது. ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் என உரிமையாளர் இளங்கோவன் அறிவிப்பு செய்ததால், பொதுமக்கள் ஏராளமானோர் கடையில் குவிந்தனர். மேலும் தாங்கள் விருப்பப்பட்டதை வாங்கிச் சென்றனர். அதே சமயம் அங்குள்ள வசதிகள் குறித்து அறிந்து கொள்வதற்காக வளாகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று சுற்றிப் பார்த்து ரசித்தனர். திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் அன்புடன் வரவேற்றார் நிறுவனத்தின் உரிமையாளர் இளங்கோவன். இந்த நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளராக கணேசன் மற்றும் சதீஷ் ஆகியோர் இணைந்து பணியாற்றினர். கடை திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நிறுவனத்தின் சார்பில் நினைவு பரிசாக வால் கிளாக் ஒன்றும் மரக்கன்று ஒன்றும் வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.