சேலம் சீலநாயக்கன்பட்டியில் மளிகை கடையின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

போலீசார் விசாரணை

Update: 2024-08-19 03:18 GMT
சேலம் சீலநாயக்கன்பட்டி சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் குமரவேல் (வயது 45). மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து கடையை பூட்டி விட்டு சென்று விட்டார். நேற்று காலை வழக்கம் போல கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 4 பவுன் நகை, ரூ.70 ஆயிரம் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

Similar News