தனியார் பள்ளி மாணவ மாணவிகள் காவல் நிலையத்தை பார்வையிட்டனர்
குமாரபாளையம் தனியார் பள்ளி மாணவ மாணவிகள் காவல்துறையின் செயல்பாடுகள் குறித்தும் மற்றும் சிறை அறைகள் குறித்து காவல் நிலையத்தில் பார்வையிட்டனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செயல்படும் தனியார் மெட்ரிக் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு பயிலும் 60 மாணவ மாணவிகள் குமாரபாளையம் காவல் நிலையத்தில் இன்று காவலர்கள் பணி குறித்து பார்வையிட்டனர் அப்பொழுது அவர்களிடம் காவல் ஆய்வாளர் தவமணி காவல்துறையில் பணிபுரியும் அலுவலர்கள் குறித்து விளக்கம் அளித்த மேலும் பள்ளி மாணவ மாணவிகள் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் என் 10 98 குறித்தும் விளக்கம் அளித்ததுடன் குழந்தைகளின் பெற்றோர்கள் தலைக்கவசம் அணியாமல் வாகனங்களில் சென்றால் விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படக்கூடும் எனவே பெற்றோர்களிடம் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மாணவ மாணவிகளின் தாயார் மற்றும் அருகில் இருக்கும் பெண்கள் அனைவரும் காவலன் உதவி செயலி குறித்து விளக்கம் தெரிந்து இருக்க வேண்டும் அந்த செயலையை தங்கள் கைப்பேசிகளில் பதிவிறக்கம் செய்து அதன் செயல்பாடுகள் குறித்து விளக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் அரை குறித்து விளக்கம் தெரிவித்தவுடன் குற்றவாளிகளை துப்பாக்கி மூலம் எச்சரிக்கை செய்து பிடிக்கும் நிலை குறித்தும் விலக்கி தெரிவித்தது மேலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து குறித்தும் மாணவ மாணவிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது