கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு-கொச்சுவேலி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
ரெயில்வே கோட்டம் அறிவிப்பு
ரெயில்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பெங்களூருவில் இருந்து சேலம், திருப்பூர், போத்தனூர் வழியாக திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி பெங்களூரு-கொச்சுவேலி சிறப்பு ரெயில் (வண்டி எண்-06239) நேற்று முதல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 17-ந் தேதி வரை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் பெங்களூருவில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவு 2.07 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 2.10 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், சங்கணாச்சேரி, திருவல்லா, செங்கன்னூர், மாவேலிக்கரை, காயங்குளம், கொல்லம் வழியாக மறுநாள் மதியம் 2.15 மணிக்கு கொச்சுவேலி சென்றடையும். இதேபோல் மறு மார்க்கத்தில் கொச்சுவேலி-பெங்களூரு சிறப்பு ரெயில் (வண்டி எண்-06240) இன்று (புதன்கிழமை) முதல் செப்டம்பர் மாதம் 18-ந் தேதி வரை திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் கொச்சுவேலியில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக மறு நாள் அதிகாலை 4.27 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட்டு காலை 10.30 மணிக்கு பெங்களூரு சென்றடையும். இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.