சேலம் உத்தமசோழபுரத்தில் கொப்பரை தேங்காய் ஏலம்

ரூ.7½ லட்சத்துக்கு விற்பனை

Update: 2024-08-21 09:17 GMT
சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் தேசிய வேளாண் மின்னணு சந்தையாக இணையதளம் மூலம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர். கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட்சமாக 72 ரூபாய் 50 காசுவும், அதிகபட்சமாக ரூ.102-க்கும் விற்பனையானது. மொத்தம் 7.91 டன் எடையுள்ள 193 மூட்டை கொப்பரை தேங்காய் ரூ.7 லட்சத்து 69 ஆயிரத்திற்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணி தெரிவித்தார்.

Similar News