நெல்லை புறநகர் மாவட்டம் ஏர்வாடி நகர விமன் இந்தியா மூவ்மெண்டின் நகர தலைவர் ஹமிதா அக்பர், நகர பொருளாளர் பாத்திமா காலித் மற்றும் எஸ்டிபிஐ கட்சியின் 5வது வார்டு உறுப்பினர் ஹலிமா ஆகியோர் ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக தலைமை ஆசிரியராக பொறுப்பேற்று இருக்கும் சுமதியை நேற்று விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்பொழுது அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளின் நலனிலும் அக்கறையும் மாணவிகளின் கல்வியின் விஷயத்தில் முன்னேற்றத்தையும் சிறப்பான முறையில் செய்து தர வேண்டி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.