சாலை ஆக்கிரமிப்பால் விபத்து டூவீலரில் வந்தவர் லாரியில் சிக்கி படுகாயம்
குமாரபாளையம் அருகே டூவீலரில் சென்ற இளைஞர் நிலை தடுமாறி லாரியின் சக்கரத்தில் சிக்கி படுயகாயமடைந்தார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே டூவீலரில் சென்ற இளைஞர் நிலை தடுமாறி லாரியின் சக்கரத்தில் சிக்கி படுயகாயமடைந்தார். ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள செங்காடு பகுதியை சேர்ந்தவர் செல்வகுமாரன்,25. குமாரபாளையம் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்றைய தினம் மாலை உணவு அருந்த செல்வதற்காக மாலை 01:30 மணியளவில் தனக்கு சொந்தமான டூவீலரில், குமாரபாளையத்தில் இருந்து எடப்பாடி செல்லும் சாலையில் உள்ள சின்னப்ப நாயக்கன்பாளையம் வாரச்சந்தை பேருந்து நிறுத்தம் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க, பிரேக் பிடித்ததில், நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்பொழுது எதிர்பாராத விதமாக, பின்னால் வந்த லாரியின் சக்கரத்தில் நிலை தடுமாறி விழுந்தார். இதில், அவரது இடது கையின் மீது, லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியதில் கை சேதமடைந்தது. மேலும் தலையில் பலத்த காயமும் ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். இடைப்பாடி சாலை ஆக்கிரமிப்பால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு பல் விபத்துக்கள் நடந்து வருகிறது. இது குறித்து ஆக்கிரமிப்புகள் அகற்றி விபத்துக்களிலிருந்து காக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.