இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தவெக நிர்வாகிகள்

கட்சியின் புதிய கொடி அறிமுக நிகழ்வை ஒட்டி மக்களுக்கு இனிப்பு வழங்கி கட்சி நிர்வாகிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்

Update: 2024-08-22 15:04 GMT
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் கட்சியினை ஆரம்பித்துள்ள நிலையில் , கட்சியின் புதிய கொடி அறிமுக விழா நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. கொடியினை நடிகரும், கட்சியின் நிறுவன தலைவருமான விஜய் அவர்கள் அறிமுகப்படுத்தினார் .இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் தமிழக வெற்றி கழகம் கட்சி நிர்வாகிகள் உற்சாகமாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழகம் கட்சியை சேர்ந்தவர்கள், பள்ளிபாளையம் நால்ரோடு பகுதியில் பட்டாசுகள் வெடித்து பேருந்து பயணிகளுக்கு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.இந்த நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News