செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியம் தும்மக்குண்டு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
திடியன் சிந்துபட்டி வேப்பனூத்து ஊராட்சிகளை சேர்ந்த கிராம மக்கள் மனு அளித்தனர்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தும்மக்குண்டு ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் திடியன், சிந்துபட்டி, வேப்பனூத்து, தும்மக்குண்டு ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்கள் வெள்ளையம்மாள், ஜெயராமன், ராஜேஸ்வரி, பெருமாள் ஆகியோர் தலைமையிலும்,ஊரக வளர்ச்சி தணிக்கை பிரிவு உதவி இயக்குனர் ராஜா, செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கப்பாண்டி,கீதா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன் ,சமூக பாதுகாப்புத் துறை வட்டாட்சியர் இந்திரா காந்தி, உதவி பொறியாளர்கள்,உசிலம்பட்டி வட்டாட்சியர் பாலகிருஷ்ணன்,செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள், அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இந்நிகழ்வில் கூட்டுறவுத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, காவல் துறை, மருத்துவ துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட 29 அரசுத்துறைகள் இம்முகாமில் தனித்தனியே அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தது. திடியன், சிந்துபட்டி, வேப்பனூத்து, தும்மக்குண்டு உள்ளிட்ட ஐந்து ஊராட்சிகளை சேர்ந்த 1000 க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தங்களுடைய பிரச்சனைகளை கோரிக்கை மனுக்களாக அளித்தனர். மேலும் தரப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு 30 நாளில் தீர்வு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.