ஆடிப்பண்டிகையையொட்டி கோட்டை மாரியம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை
ரூ.26½ லட்சம் வசூலானது
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா நடந்து நிறைவடைந்துள்ளது. முக்கிய விழாவான பொங்கல் வைத்தல் உருளுதண்டம் 3 நாட்கள் நடைபெற்றது. விழாவையொட்டி தினமும் கோவிலுக்கு திரளான பக்தர்கள் வந்து அம்மன் தரிசனம் பெற்றனர். விழாவிற்கு வந்த பக்தர்கள் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தி சென்றனர். அதன்படி ஆடிப்பண்டிகையில் உண்டியல் வசூல் நேற்று கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்டி.என்.சக்திவேல் தலைமையில் எண்ணப்பட்டது. அதன்படி ஆடிப்பண்டிகையையொட்டி ரூ.26 லட்சத்து 58 ஆயிரத்து 947 வசூல் ஆனது. அதே போன்று 65 கிராம் தங்கம், 454 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி, அறங்காவலர்கள் ரமேஷ்பாபு, வினிதா, ஆய்வாளர்கள் கதிரேசன், கோவிந்தராஜ், உமா உள்பட பலர் கலந்து கொண்டனர்.