சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த
பாலியல் குற்றவாளி சிவராமன் உயிரிழந்தார்
கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார். கடந்த 16,18 ஆம் தேதிகளில் போலீசார் தன்னை கைது செய்ய தேடுவதை அறிந்து இரண்டு எலி பேஸ்டுகளை உட்கொண்டுள்ளார் என் தெரியவந்தது. இதனையடுத்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிவராமன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் ஆதிதிவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.