சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கு அழைப்பு

மதுரை மாவட்ட ஆட்சியர் தகவல்

Update: 2024-08-23 13:53 GMT
மதுரை மாவட்டம் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்க தொழில் முனைவோருக்கு மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அழைப்பு ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுக்குள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்திவரும் பல திட்டங்களுக்குள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தபட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டு மற்றும் தொழிற்சாலைக்கான கட்டிடங்கள் ) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படுகிறது. சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களின் மூலம் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகும், அதிகளவில் அன்னியச் செலவாணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். மேற்படி திட்டம் குறித்த விழிப்புணர்வு கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் 28.08.2024 அன்று பிற்பகல் 03.00 தமணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் முனைவோர்கள், ஜவுளி தொழில் சார்ந்த சங்கங்கள், வளரும் தொழில் முனைவோர்கள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Similar News