மதுரை வைகை ஆற்றில் கீழ் பாலம் அருகே ஆகாயத்தாமரை ஆற்றிய சமூக ஆர்வலர்

இதைப் பார்த்த பகுதி மக்கள் அவரை வெகுவாக பாராட்டினார்கள்.

Update: 2024-08-23 14:12 GMT
மதுரை கோரிப்பாளையம் கீழ் பாலம் பகுதியில், வைகை ஆற்றில் ஆகாயத்தாமரை கடல் போல பரந்து இருந்தது. இதைக்கடந்த பல மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில், ஜேசிபி மூலம் அகற்றப்பட்டது. அதை அடுத்து, பல மாதங்களாக கோரிப்பாளையம் கீழ் பாலம் பகுதியில் மீண்டும் ஆகாயத்தாமரை புதர் போல வளரத் தொடங்கியது. இதனால் , வைகை ஆற்றில் வரும் நீரானது சரியாக செல்லாமல், கீழ்ப்பாலம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இதனால், அப் பகுதிகளில், கொசு தொல்லை ஏற்படுவது, போக்குவரத்துக்கும் பொது மக்களுக்கும் இடையிலாக இருந்தது. இது குறித்து, பலமுறை பகுதி மக்கள் மதுரை மாநகராட்சி இடம் எடுத்துக் கூறியும், ஆகாயத்தாமரை அகற்ற ஆர்வம் காட்டவில்லை என கூறப்படுகிறது. இதைப் பார்த்த மதுரை சார்ந்த ஸ்டார் அறக்கட்டளை நிர்வாகி ஸ்டார் குரு சாமி என்பவர், தனது சொந்த செலவில் மதுரை கோரிப்பாளையம் கீழ் பாலம் பகுதியில் அடர்ந்து வளர்ந்து இருந்த ஆகாயத்தாமரையை, தனது சொந்தச் செலவில் ஜேசிபி மூலம் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார். இதைப் பார்த்த பகுதி மக்கள் அவரை வெகுவாக பாராட்டினார்கள்.

Similar News