அரசு கலை கல்லூரியில் தேசிய விண்வெளி தினம், தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிப்பு
குமாரபாளையம் அரசு கலை கல்லூரியில் தேசிய விண்வெளி தினம், தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிப்பு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தேசிய விண்வெளி தினம், தேசிய குடற்புழு நீக்க நாள் கடைபிடிக்கப்பட்டது. குமாரபாளையம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தேசிய விண்வெளி தினம், தேசிய குடற்புழு நீக்க நாள் கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமையில் கடைபிடிக்கப்பட்டது. தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி விழிப்புணர்வு வாசகங்கள் குறித்து, பேராசிரியர்கள் மாணவ, மாணவியர்கள் பெருமளவில் பங்கேற்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து தேசிய விண்வெளி தினம் கடைபிடிக்கப்பட்டது. முதல்வர் ரேணுகா பேசியதாவது: முதல் தேசிய விண்வெளி தினம் 2024, ஆக. 23ல், இந்தியா முழுவதும் கொண்டாடப்படும். இந்தியாவின் விண்வெளிப் பயணங்களின் சாதனைகளை வெளிப்படுத்தவும், இளைஞர்களை ஊக்கப்படுத்தவும் இந்திய அரசு ஒரு மாத கால பிரச்சாரத்தைத் தொடங்குகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், "நிலவைத் தொடும்போது உயிர்களைத் தொடுதல்: இந்தியாவின் விண்வெளி சாகா", என்பதாகும். சமூகம் மற்றும் தொழில்நுட்பத்தில் விண்வெளி ஆய்வு குறிப்பிடத்தக்க தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.