பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2024-08-23 15:14 GMT
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி பகுதியில் சுஜாதா என்ற பெண்மணி மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுள்ளார். மகளிர் சுய உதவி குழுக்களிலும் தலைவியாக இருந்த நிலையில், தனக்குத் தெரிந்த பெண்களுக்கு, மைக்ரோ பைனான்ஸ் நிதி நிறுவனத்தில் கடன் பெற்றுக் கொடுத்த நிலையில், கடனை பெற்ற பெண்கள் திடீரென தலைமறைவானதால் சுஜாதாவை நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கடனை கட்ட கோரி தொடர்ச்சியாக மிரட்டி வந்துள்ளனர். மேலும் கடனை கட்டுவதற்காக பல்வேறு இடங்களில் மேலும் மேலும் கடன் பெற்ற சுஜாதா நிதி நிறுவனங்களின் தொடர் மிரட்டலால்  மனம் உடைந்து, கடந்த செவ்வாயன்று தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார் பள்ளி பாளையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விவகாரத்தில் சுஜாதாவை தற்கொலைக்கு தூண்டிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்திட வேண்டும், இறந்து போன சுஜாதா குடும்பத்திற்கு 25 லட்சம் நிவாரண உதவி வழங்கிட வேண்டும் , பொது மக்களுக்கு தேசியமயமாக்கபட்ட வங்கிகள் மூலமாக குறைந்தபட்ச வட்டி மூலம் தேவையான குழு கடன்களை வழங்கி பாதுகாத்திட வேண்டும்,  அநியாய வட்டி வசூலிக்கும் மைக்ரோ பைனான்ஸ் மைக்ரோ நிறுவனங்கள் ஏஜென்ட்களை தடை செய்ய வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை அன்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பள்ளிபாளையம் நான்கு ரோடு பகுதியில்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்விற்கு பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் படைவீடு பெருமாள் , எம்.அசோகன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.

Similar News