அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில்

தேசிய விண்வெளி தினம் கொண்டாட்டம்

Update: 2024-08-24 12:12 GMT
சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு சார்பில் தேசிய விண்வெளி தினம் கொண்டாடப்பட்டது. துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து கல்லூரி வளாகத்தில் பல்கலைக்கழக மானியக்குழுவின் பரிந்துரைப்படி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த செயற்கைகோள் சார்ந்த விவரங்கள் அடங்கிய புகைப்பட கண்காட்சியை தொடங்கிவைத்தார். தொடர்ந்து இந்திய விண்வெளி திட்டத்தின் பயணம், விண்வெளி ஆய்வாளர்கள், இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு சார்ந்த வீடியோ கண்காட்சியும் தொடங்கிவைக்கப்பட்டது. மேலும் நடமாடும் கோளரங்கமும் கல்லூரி வளாகத்தில் மாணவர்களிடையே வானியல் சார்ந்த ஆர்வத்தை மாணவர்களிடையே வளர்க்கும் நோக்கில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவைகள் அனைத்தையும் துறை மாணவர்கள், அருகிலுள்ள கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டனர். மேலும் துறையின் சார்பில் இணையவழி வினா-விடை போட்டி நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கண்காட்சி மற்றும் கோளரங்கை பார்வையிட்ட மாணவர்களுக்கு சந்திரயான் 3 மற்றும் இந்திய செயற்கை கோள்கள் போன்ற விண்வெளி சார்ந்த விவரங்கள் அடங்கிய பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தனசேகர், ஜெயபாலன், ஜமுனா, அல்போன்ஸ், இளைஞர் நல அமைப்பு தலைவர் மெய்பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.

Similar News