கல்லூரி மாணவ மாணவிகளின் சார்பில் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் மனிதநேய நாள் அனுசரிப்பு
குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியின் விமானவியல் துறை மாணவ மாணவிகள் சார்பில் மனித நேய நாள் குமாரபாளையம் பாசம் இல்லத்தில் முதியவர்கள் ஆடல் பாடலுடன் கொண்டாடினர்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எக்ஸல் கல்லூரியின் விமானவியல் துறை மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மனிதநேய நாளை முன்னி்ட்டு பாச இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கியும் அவர்களுடன் பேசி மகிழ்ந்தும் மனிதநேய நாளை கொண்டாடினர் பாசம் அறக்கட்டளையின் நிறுவனர் குமார் கல்லூரி மாணவிகளை வரவேற்று பேசும்பொழுது, கடந்த இரண்டு வருடங்களாக பாசம் இல்லத்தை நடத்தி வருவதாகவும், கல்லூரி மாணவ மாணவிகளின் வருகை மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும் மேலும் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் எனவும் கூறினார். மாணவ மாணவிகள் இது போன்ற இல்லங்களுக்கு சென்று அவர்களால் முடிந்த உதவியை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.நிகழ்வின் முடிவில் மாணவ மாணவிகள் பாசம் இல்லத்தில் உள்ள ஆதரவற்ற முதியோர்களை உற்சாகமூட்டும் வகையில் நடனங்கள் மற்றும் பாடல்களைப் பாடி அவர்களை மகிழ்வித்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை எக்ஸல் கல்லூரி விமானவியல் துறையின் உதவிப்பேராசிரியர்கள் சீனிவாச ராஜா மற்றும் பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.