அரசு இராஜாஜி மருத்துவமனை

மருத்துவர்கள் மாணவ மாணவிகள் பேராசிரியர்கள் பிரியா விடை அளித்தனர்

Update: 2024-08-25 09:18 GMT
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு இராஜாஜி மருத்துவமனை & மருத்துவ கல்லூரியின் முதல்வரும் பொது மருத்துவ பேராசிரியருமான தர்மராஜ் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பொது மருத்துவ துறை தலைவர் நடராஜன் குத்து விளக்கேற்றி துவங்கி வைத்தார். பேராசிரியர் டேவிட்பிரதீப்குமார் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் மருத்துவ கல்வி & ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, தஞ்சை&திருப்பூர் மருத்துவ கல்லூரி முதல்வர்கள் பாலாஜிநாதன், முருகேசன் மற்றும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் துணை முதல்வர் மல்லிகா, கண்காணிப்பாளர் குமரவேல், முதுநிலை மருத்துவர் செந்தில் உட்பட பேராசிரியர்கள் மருத்துவ மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News